கேரளாவில் மேலும் 12 பேருக்கு கோவிட் 19 உறுதி செய்யப்பட்டுள்ளது; முதல்வர் பினராய் விஜயன் தகவல்
திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயன் சனிக்கிழமை நிருபர்களிடம் கூறியது:
கேரளாவில் இன்று மேலும் 12 பேருக்கு கோவிட் 19 உறுதிசெய்யப்பட்டுள்ளது. காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேருக்கும், கண்ணூர் மற்றும் எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்த தலா மூன்று பேருக்கும் இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கோவிட் 19 பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கேரளாவில் 52 ஆக உயர்ந்துள்ளது. காசர்கோட்டில் நோய் உறுதி செய்யப்பட்ட ஐந்து பேர் காசர்கோடு அரசு பொது மருத்துவமனையிலும் ஒருவர் எர்ணாகுளம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் கண்ணூர் மாவட்டத்தில் நோய் உறுதி செய்யப்பட்டு அதில் இரண்டு பேர் தலசேரி அரசு மருத்துவமனையிலும் ஒருவர் கண்ணூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர் எர்ணாகுளம் மாவட்டத்தில் நோய் உறுதி செய்யப்பட்ட 3 பேரும் எர்ணாகுளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் கேரளாவில் இதுவரை 53, 013 பேர் கண்காணிப்பில் உள்ளனர். 52, 785 பேர் வீடுகளிலும், 228 பேர் மருத்துவமனைகளிலும் கண்காணிப்பில் உள்ளனர் சனிக்கிழமை மட்டும் 70 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்